Shweta Menon: "தாய்மார்களுக்கு படப்பிடிப்புத் தளங்களில் வேலை நேர நிர்ணயம் வேண்டும்" - ஸ்வேதா மேனன்
கேரள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists)-வின் முதல் பெண் தலைவராகக் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டார்.
கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். பல்வேறு சர்ச்சைகளையும், கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, அவர் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் 'India Today'-விற்கு ஸ்வேதா மேனன் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் பேசியிருக்கும் அவர், "நான் கர்ப்பமாக இருந்தபோது 4 படங்களில் நடித்துள்ளேன். அதிகாலையில் எழுந்து படப்பிடிப்புக்குச் செல்வது கடினமாக இருக்கும்.
அதனை நான் இயக்குநர்களிடமும் சொன்னேன். அவர்களும் புரிந்துகொண்டார்கள்.
ஆனால் சிலர் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். நான் பதவியேற்ற முதல் நாளே பெண் நடிகைகளிடம் உங்களுக்கு எந்தப் பிரச்னை இருந்தாலும் தைரியமாகச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும். பணிபுரியும் தாய்மார்களுக்குப் படப்பிடிப்பு தளங்களில் வேலை நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...