செய்திகள் :

ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

post image

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நோட்டீஸுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு விதிக்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “நோட்டீஸுக்கு அன்புமணி பதிலளிக்காததால், அவர் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்குகிறேன்” என்றார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எனக்கு இதைவிட வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன, வழக்கறிஞர் பாலு விளக்கம் அளிப்பார் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலு, “பாமக கட்சி விதிகளின்படி, நிறுவனருக்கு கட்சியின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லை. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கே அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

பாமகவில் முற்றும் மோதல்

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸின் எதிர்ப்பை மீறி, கட்சி நடவடிக்கைகளை அன்புமணி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ராமதாஸ் தலைமையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக ஒழுங்கீனமாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இதுகுறித்து ஆக. 31-க்குள் அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் அவர் பதிலளிக்காததால் 10 நாள்கள் மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அன்புமணிக்கு விடுக்கப்பட்ட அவகாசம் நிறைவடைந்தததை அடுத்து, அவர் பதிலளிக்காததால் கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Ramadoss has no power: Anbumani's team

இதையும் படிக்க : பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்

கோவையில் அக். 9,10-ல் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் ஸ்டாலின்

கோயம்புத்தூரில் வரும் அக். 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 11) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக... மேலும் பார்க்க

மின்சுற்றுப் பலகை உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிதாக நிறுவவுள்ள மல்டிலேயர் எச்டிஐ பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் உற்பத்தி திட்டத்த... மேலும் பார்க்க

ஓசூர் மாநாட்டில் 92 ஒப்பந்தங்கள் மூலம் 49,353 வேலைவாய்ப்பு!

ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்னிந்திய பகுத... மேலும் பார்க்க

நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்: ஒசூரில் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

ஒசூர் : தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக ஒசூரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.ஒசூரில் இன்று காலை தொ... மேலும் பார்க்க

மதுபோதை + கூகுள் மேப் = கடலுக்குள் இறங்கிய கார்!

சிதம்பரம்: மதுபோதையில் கூகுள் மேப்பை பின்பற்றி காரை இயக்கிய ஓட்டுநர், தவறுதலாக கடலுக்குள் காரை இறக்கியுள்ளார்.சென்னையைச் சேர்ந்த 5 பேர், கடலூர் வழியாக காரில் பயணம் செய்துள்ளனர். கடலூர் துறைமுகத்திலிரு... மேலும் பார்க்க