செய்திகள் :

சத்தீஸ்கரில் 16 நச்கல்கள் சரண்!

post image

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாகப் பல நக்சல்கள் சரணடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை மேலும் 16 நக்சல்கள் மூத்த காவல்துறை அதிகாரிகள் முன்பு சரணடைந்தனர்.

மாவோயிஸ்ட் சித்தாந்தம், அப்பாவி பழங்குடியினர் மீது நக்சல்கள் நடத்தப்படும் அட்டூழியங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்பில் வளர்ந்துவரும் உள் வேறுபாடுகள் ஆகியவற்றில் ஏமாற்றமடைந்ததாக நாராயண்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராபின்சன் குரியா கூறினார்.

16 நக்சல்களும் ஜனதன சர்க்கார், சேத்னா நாட்டிய மண்டலி மற்றும் மாவோயிஸ்ட்களின் பஞ்சாயத்துப் போராளிகள் உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கீழ்நிலையைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.

ஆயுதமேந்திய மாவோயிஸ்ட் குழுக்களுக்கு ரேஷன் பொருள்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், மேலும் ஆயுதங்கள், வெடிபொருள்களைக் கொண்டு செல்வதில் உதவுதல், ஐஇடிகளை வைத்தல், பாதுகாப்புப் படையினரின் நடமாட்டம் குறித்த தகவல்களைச் சேகரித்தல் மற்றும் சோதனை நடத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

சரணடைந்த அனைத்து நக்சலைட்டுகளுக்கும் தலா ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் அரசு கொள்கையின்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர் கூறினார். மார்ச் 2026க்குள் நாட்டிலிருந்து நக்சலிசம் ஒழிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Police said 16 Naxals have surrendered in Chhattisgarh's Narayanpur district.

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தீர்ப்பு மீது, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சட்டப் பேரவைகளில் நிறைவேற... மேலும் பார்க்க

ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்: ராகுல் காந்தி தலைமை தாங்கினார்!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகு... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி எம்பியை சந்திக்க முயன்ற முன்னாள் முதல்வர்! தடுத்து நிறுத்திய காவல் துறை!

ஜம்மு - காஷ்மீரில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரைச் சந்திக்க முயன்ற முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜம்மு - காஷ்மீரின்... மேலும் பார்க்க

ஆளுநர் பதவியிலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜிநாமா: குஜராத் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிர ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தேசி... மேலும் பார்க்க

தீ போல பரவும் வாக்குத் திருட்டு பிரசாரம்: ராகுல் காந்தி

புது தில்லி: வாக்குகளைத் திருடியே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது என்பதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறோம் என்று காங்கிரஸ் எம்.பி. ... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களுக்கு அதிக மானியம்: ஒடிசா அரசின் புதிய திட்டம்!

மின்சார வாகனங்களுக்கு அதிக மானியம் வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசு தனது புதிய வரைவு மின்சார வாகனக் கொள்கை - 2025இன் கீழ் இந்தி விதியை இணைத்துள்ளது. இது சம்பந்தப்... மேலும் பார்க்க