Apple Event: ஆப்பிளின் புதிய 17 சீரிஸ் எப்படி இருக்கிறது? விலை என்ன? விவரங்கள் இதோ!
ஆப்பிளின் செப்டம்பர் மாத ஈவண்ட் நடந்து முடிந்துவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஆப்பிள் பெரிதாக அப்டேட் கொண்டுவரும் என்று எதிர்பார்த்து ஆப்பிளின் வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்.
இம்முறையாவது புதிய பெரிய மாற்றங்கள், அசர வைக்கும் டிசைன்கள், புதிய புதிய டெக் அப்டேட்கள் வரும் என்று எதிர்பார்த்தால், மீண்டும் கலர் கலராக ஆப்பிளின் 17 சீரியஸை அறிமுகப்படுத்தி வழக்கம்போல ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

நெகட்டிவாகப் பேசுவதாக நினைக்க வேண்டாம், புதிய மாடல்களில் கலர்களைத் தவிர வேறேதும் கவனம் ஈர்க்கும்படி இல்லை. நிகழ்ச்சிகூட முந்தைய ஆப்பிள் ஈவண்ட்களைப் போல சுவாரஸ்யாமாகக் கூட இல்லை. செயற்கை தொழில்நுட்ப ரீதியாகவும் பெரிதாக எந்தவொரு அப்டேட்டும் இல்லை.
ஆப்பிள் ஈவண்ட என்றாலே ஆச்சர்யங்களும், புதிய புதிய தொழில்நுட்பங்களும், வீடியோ காட்சிகள், நுட்பமான டெக் விவரங்களும், பொருட்களின் அறிமுகங்களும் பார்ப்பதற்கே ஆச்சர்யங்களை அள்ளித் தெளிக்கும். ஆனால் இந்த ஆப்பிள் ஈவண்ட் நுட்பமான விவரங்கள், அப்டேட்கள் ஏதுமில்லாமல் தட்டையாக நடந்து முடிந்திருக்கிறது.
ஐபோன் ஏர்
இதுதான் ஆப்பிளின் 5.6 மிமீ தடிமன் கொண்ட ஸ்லிம்மான மாடல். ஐபோன் 14 மாடலைவிடவும் கொஞ்சம் குறைவான 165 கிராம் எடை. 'Grade 5 titanium' மெட்டீரியல் கொண்டு உருவாக்கப்பட்டு பளபளப்பாக மின்னுகிறது.
6.5-இன்ச் Super Retina XDR டிஸ்ப்ளே, ProMotion (up to 120Hz), 3000 nits வரை பிரகாசம், Always-On display போன்ற சிறப்பம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது.
Pro மாடல்களில் பயன்படுத்தப்படும் புதிய A19 Pro சிப் இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது நல்லது. 48 MP dual-fusion பின்புற கேமரா, அப்பச்சர் F1.6,18 MP முன்புற கேமரா போதுமானதாக இருக்கும்.

இந்த போன் கையில் அடக்கமாக வைத்துக் கொள்ள ஸ்லிம்மாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. தேவையான அளவு சிறப்பம்சங்களும் இருக்கின்றன. சரி வாங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு பேட்டரியில்தான் ஆப்பு வைத்திருக்கிறார்கள்.
மிகக்குறைவான 3149 mAh பேட்டரிதான், 20 வாட் சார்ஜிங் சப்போர்ட், சார்ஜரை தூக்கிக் கொண்டே திரிய வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த போனின் விலையும் ரூ.1,19,900 முதல் ஆரம்பமாவது விலைக்கு நியாயம் சேர்ப்பதாக இல்லை. டிசைனைப் பொறுத்தவரையும் அப்படியே கூகுள் பிக்சல்தான்.
ஐபோன் 17
ஐபோன் 16க்கு மாற்றாகப் புதியாக பச்சை (saga), லாவண்டர், மிஸ்ட் புளு உள்ளிட்ட புதிய கலர்களில் கலர் கலராக அறிமுகமாகியிருக்கிறது ஐபோன் 17. பழைய 6.1-இன்ச் டிஸ்பிளேவில் இருந்து 6.3 இன்ச் எனக் கொஞ்சம் பெரிய டிஸ்பிளே, 60 Hz லிருந்து 120 Hz என மாற்றப்பட்டிருக்கிறது.

ஆப்பிளின் புதிய A19 சிப் இதில் பயன்படுத்தப்படுகிறது. கேமாரவைப் பொறுத்தவரை 48 MP 'dual fusion' சென்சார், அப்பச்சர் f1.6, f2.2, பின்புறம், 18 MP, ஸ்கொயர் சென்சர் பின்புறம், அப்பச்சர் f 1.9. 25 வாட் சார்ஜிங் சப்போர்ட். ஐபோன் 17 விலை ரூ.82,900 முதல் ஆரம்பமாகிறது. ஐபோன் 16க்கும் 17க்கும் பெரிதாக எந்தவொரு மாற்றமுமில்லை.
ஐபோன் 17 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்
இந்த ப்ரோ, ப்ரோ மேக்ஸ் மாடல்களில் தொழில்நுட்ப சிறப்பம்சங்களைவிடவும் இந்த காஸ்மிக் ஆரஞ்சு கலர்தான் கவனம் ஈர்த்திருக்கிறது. ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டு புதிய பிரத்தேக கலர்களை அறிமுகப்படுத்தும். இம்முறை அது இந்த காஸ்மிக் ஆரஞ்சுதான்.

ஐபோன் 17 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் மாடல்களிலும் ProMotion (120Hz) மற்றும் Always-On டிஸ்பிளேதான். ப்ரோ 6.3 இன்ச், ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்பிளே. இரண்டுமே 3000 nits பிரகாசம் கொண்ட டிஸ்பிளேதான். இரண்டு போன்களிலும் ஆப்பிளின் புதிய A19 ப்ரோ சிப்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இரண்டிலும் 48MP f 1.78, f2.2, f2.8 என 'wide, ultra wide, Tele' என மூன்று கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது, அதே 48 MP கேமராவில் மேக்ரோவும் உள்ளது. 8X ஆப்டிக்கல் ஜூம், 40X வரை டிஜிட்டலில் ஜூம் செய்துகொள்ளலாம்.
முன்பக்கம் 18MP f 1.9 கேமரா. பேட்டரியைப் பொறுத்தவரை ப்ரோவில் 4252 mAh, ப்ரோ மேக்ஸில் 5088 mAh. இரண்டிலும் 24 வாட் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது. மற்றபடி புதிதாக ஆச்சர்யமூட்டும் சிறப்பம்சங்கள் ஏதுமில்லை.
ஐபோன் 17 புரோ போனின் விலை ரூ.1,34,900 முதல் தொடங்குகிறது.
ஐபோன் 17 புரோ மேக்ஸ் போனின் விலை ரூ.1,49,900 முதல் தொடங்குகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs