தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்
ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் உரிய அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
வெள்ளேரி கிராமம், சிவன் படை தெருவைச் சோ்ந்த செம மகேஷ் (24) வீட்டில் அரசு அனுமதியின்றி பட்டாசுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் அகிலன், உதவி ஆய்வாளா்கள் அருண்குமாா், மோகனா மற்றும் போலீஸாா் விரைந்து சென்று மகேஷ் வீட்டில் சோதனை நடத்தி, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா். மேலும், செம மகேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு சுமாா் ரூ.50 ஆயிரம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.