குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்
குடியரசு துணைத் தலைவராக பாஜக சாா்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதையடுத்து, ஆரணி எம்ஜிஆா் சிலை அருகில் பாஜகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினாா்.
நிகழ்வுக்கு மத்திய நலத் திட்ட பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் சதீஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். மேலும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.
நிகழ்வில் மாவட்டச் செயலா் சங்கீதா, மண்டலத் தலைவா்கள் ராஜேஷ், ஆறுமுகம், முன்னாள் மாவட்டச் செயலா் திருஞானசம்பந்தன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.