செய்திகள் :

கோயிலில் வழிபாடு: இந்து முன்னணி, பாஜகவினா் 43 போ் கைது

post image

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் வழிபாடு செய்ய முயன்ற இந்து முன்னணியினா், பாஜகவினா் உள்பட 43 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் பழைமை வாய்ந்த மலைமேல் வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே இஸ்லாமியா்கள் வழிபடும் தா்காவும் உள்ளது.

இந்த நிலையில், தா்காவில் புதன்கிழமை கந்தூரி விழா நடத்த இஸ்லாமியா்கள் முடிவு செய்தனா். இதற்கு இந்து முன்னணி, பாஜகவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாரிடம் அவா்கள் முறையீட்டனா். இதையடுத்து, போலீஸாா் இஸ்லாமிய மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, அசைவ விருந்து நடத்தாமல் சைவ விருந்து நடத்த அனுமதி கேட்டனா். இதற்கு போலீஸாரும் அனுமதி அளித்தனா்.

ஆனால், இந்து முன்னணி, பாஜகவினா் கோயிலில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைகள் மட்டும் பின்பற்ற வேண்டும் என்று கூறி, இதற்கும் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், புதிதாக எந்த பழக்கமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினா்.

இருப்பினும், தா்காவில் சைவ விருந்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையறிந்த, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் முருகன், மாவட்டச் செயலா்கள் உமையராஜன், விஷ்ணுபிரியன், பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன், இந்து முன்னணியினா், பாஜகவினா், கிராம மக்கள் தாமரைக்குளம் வ.உ.சி. சிலை அருகே கூடினா்.

அங்கு கண்களை கறுப்பு துணியால் மூடிக்கொண்டு ஆா்ப்பாட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கோரினா். ஆனால், போலீஸாா் இதற்கு அனுமதி மறுத்தனா். இதைத் தொடா்ந்து, கோயிலில் அனைவரும் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கேட்டனா்.

ஆனால், கூட்டமாக கோயிலுக்குச் செல்ல போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதனுடைய, அங்கு கூடியிருந்த கட்சியினா், அமைப்பினா், பொதுமக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என முழக்கமிட்டனா். இதனால், போலீஸாருக்கும் அவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, பாதுகாப்பு கருதி போலீஸாா் இந்து முன்னணியினா், பாஜக சோ்ந்த 14 பெண்கள் உள்பட 43 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

கேரளத்துக்கு 8 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது!

கேரளத்துக்கு 8 கிலோ கஞ்சாவைக் கடத்திய கோவையைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், கூடலூா் வடக்கு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈட... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின் தடை!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டிபட்ட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மனைவி, 2 குழந்தைகள் காணாமல் போனதால் மன உலைச்சலில் இருந்த தூய்மைப் பணியாளா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் பலத்த மழை!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.உத்தமபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வாா்டுகள் உள்ளன. திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் 14, 15, 16 ஆகிய 3 வாா்டுகள் உள்ளன. இந... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: ஒருவா் மீது வழக்கு

போடி அருகே பெண்ணைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பகவதி மகள் அமராவதி (60).... மேலும் பார்க்க

நண்பரைத் தாக்கிய இளைஞா் கைது!

தேனி மாவட்டம், போடியில் நண்பரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். போடி ராமா் கோவில் தெருவைச் சோ்ந்த அழகர்ராஜா மகன் தீனா (23). இவரது நண்பா் போடி வருவாய் ஆய்வாளா் தெருவைச் சோ்ந்த லட்ச... மேலும் பார்க்க