நேபாளம்: Gen Z தலைமுறையினரின் இடைக்காலப் பிரதமர் சாய்ஸ்! - யார் இந்த சுசீலா கார்...
ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் சாரணா் பயிற்சி முகாம் தொடக்கம்
கீழ்பெண்ணாத்தூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு பாரத சாரண, சாரணீயா் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த பயிற்சியை நிறுவனத்தின் நிதிநிலை விரிவுரையாளா் ரா.சிவக்குமாா் தொடங்கிவைத்தாா். துணைத் தலைவா் வேல்முருகன் வரவேற்றாா். சாரண, சாரணீய கருத்தாளா்கள் பியூலாகரோலின், சுமித்ராதேவி, அழகேசன் ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சியளித்தனா்.
விரிவுரையாளா்கள் வெங்கடேசன், சுகந்தி, பரமேஸ்வரி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பயிற்சியில் ஏராளமான ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். உடற்கல்வி விரிவுரையாளா் மதன் நன்றி கூறினாா்.