செய்திகள் :

வாழப்பாடி அருகே கவிழ்ந்த ஆம்னி பேருந்து: தொழிலதிபர் பலி; 5 பேர் படுகாயம்!

post image

வாழப்பாடி: வாழப்பாடி அருகே புதன்கிழமை நள்ளிரவு ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பலியானார்.

மேலும், பேருந்தில் பயணித்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உதகையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து, வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்தது.

அப்போது மேம்பாலம் அருகே திடீரென கார் குறுக்கே வந்த நிலையில், தென்காசியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜான்ராஜ் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார். இதில் நிலைதடுமாறிய ஆம்னி பேருந்து சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில், சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் (59), கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையம் ஜோதிமணி (52), உதகை கடநாடு ராதாகிருஷ்ணன் (61), பேருந்து ஓட்டுநர் ஜான்ராஜ் (40) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகம் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

மேலும், படுகாயங்களுடன் ஓட்டுநர் ஜான்ராஜ் உள்ளிட்ட 5 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளர் வேல்முருகன், உதவி ஆய்வாளர்கள் வெங்கடாஜலம், மயில்சாமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Omni bus overturns near Vazhapadi: Businessman killed; 5 injured

இதையும் படிக்க : டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! பல்கலை. நிகழ்ச்சியில் பயங்கரம்!

செப். 14-ல் தமிழகம் வருகிறார் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற செப். 14 ஆம் தேதி சென்னை வர உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி சி... மேலும் பார்க்க

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.மேலும், அன்புமணியிடம் பாமகவைச் சேர்ந்தவர்கள் எவ்வித தொடர்பு... மேலும் பார்க்க

சபரீசனின் தந்தை காலமானார்! முதல்வரின் நாளைய நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (வயது 80) உடல்நலக் குறைவால் புதன்கிழமை நள்ளிரவு காலமானார். சென்னை ஓ.எம்.ஆர்-இல் உள்ள தனியார் மருத்துவமனையில் வயதுமூப்பால் ஏற்ப... மேலும் பார்க்க

கோவையில் சாலையோரம் கிடந்த இளைஞரின் சடலம்! கொலையா? தற்கொலையா?

கோவை: கோவை அருகே சாலையோர முட்புதரில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை, போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் சாலையோர ... மேலும் பார்க்க

மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்

பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரன் விலகவுள்ளதாக வெளியான செய்திக்கு அவர் பதிலளித்துள்ளார்.தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்... மேலும் பார்க்க

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பல... மேலும் பார்க்க