டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!
சபரீசனின் தந்தை காலமானார்! முதல்வரின் நாளைய நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (வயது 80) உடல்நலக் குறைவால் புதன்கிழமை நள்ளிரவு காலமானார்.
சென்னை ஓ.எம்.ஆர்-இல் உள்ள தனியார் மருத்துவமனையில் வயதுமூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த வேதமூர்த்தி சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
அவரது உடல் கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இன்றும் நாளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளவிருந்த நிலையில், நாளைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.