செய்திகள் :

தொடரும் தாக்குதல்! காஸாவில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்?

post image

காஸா நகரத்தில் இருந்து கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன.

காஸாவில் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட போர், 2 ஆண்டுகளை நெருங்கியுள்ளது. காஸாவில் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் இறக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஸாவில் உள்ள மோசமான சூழ்நிலையால் அங்குள்ள மக்கள் பலரும் வெளியேறி வருகின்றனர்.

மேலும் சமீபமாக இஸ்ரேல் படைகள், காஸா மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. நேற்று காஸாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி சமீபத்திய வாரங்களில் சுமார் 2 லட்சம் பேர் காஸாவை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு காஸாவில் குறிப்பிட்ட பகுதி 'பாதுகாப்பானது' என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் வடக்கு காஸாவில் இருந்து பலரும் தெற்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இதனிடையே காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

காஸா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் பயங்கரவாதம் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இன்று அதிகாலை முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Israeli military says 200,000 people forced out of Gaza City: Reports

அமெரிக்காவின் இருண்ட காலம்: சார்லி கிர்க் கொலை பற்றி டிரம்ப்

சமூக ஆர்வலரும், அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டது கொடூரமான படுகொலை என்று குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.அமெரிக்காவின் திரு... மேலும் பார்க்க

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை: கொலையாளி யார்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர், பழமைவாத கொள்கையாளர் என அறியப்படும் சார்லி கிர்க் கொலையில் தொடர்புடையவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.சம்பவ இடத்தில், சந... மேலும் பார்க்க

டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!

அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆர்வலர், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் என்று அறியப்படும் சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 31.சில மாதங்களுக்கு முன்பு, கிர்க்கின் மனைவி எரி... மேலும் பார்க்க

நேபாள சிறையில் மோதல்: மூவர் பலி, 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்!

நேபாள சிறையில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கைதிகள் மூவர் உயிரிழந்தனர். மேலும் பல்வேறு சிறைகளிலிருந்தும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு வி... மேலும் பார்க்க

நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்!

நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிராக நடந்த கலவரத்திலிருந்து தப்பி, அந்நாட்டு அமைச்சர்களும் குடும்பத்தினரும் ராணுவ ஹெலிகாப்டர்களில் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.இதில், ஒரு அமைச்சர் மற்று... மேலும் பார்க்க

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பயங்கரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பி ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால... மேலும் பார்க்க