Vikatan Digital Awards 2025: அனைவரையும் ரசிக்க வைக்கும் `Billu Show' - Best Kids...
Untitled Sep 11, 2025 09:10 am
மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 119.73 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,275 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,717 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் இருப்பு 93.04 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூரில் புதன்கிழமை இரவு 51.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.