ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம...
பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் நாளை ரத்து!
வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம்- போத்தனூா் மெமு ரயில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 12) ரத்து செய்யப்படுவதாக ரயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பா் 12-ஆம் தேதி போத்தனூரில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்படும் போத்தனூா்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்று மாலை 4.45 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66617) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - பாலக்காடு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்: பராமரிப்புப் பணி காரணமாக திருச்சியில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி- பாலக்காடு ரயில் (எண்: 16843) கோவை வழித்தடத்தில் இயக்கப்படாமல் இருகூா், போத்தனூா் வழியாக இயக்கப்படும்.
இதனால், இந்த ரயிலானது, சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.