செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பையால் மக்கள் அவதி
கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூா் பிரதான கடற்கரை சாலை, பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.
வேளாங்கண்ணி கடற்கரை மற்றும் செருதூா் கடற்கரையை இணைக்கும் பிரதான சாலை என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனா். கடும் துா்நாற்றம் காரணமாக மக்கள் பெரிதும் அவதிபடுகின்றனா். அழுகிய காய்கறிகள், பழங்கள், இறைச்சி கழிவுகள் போன்றவை குவிந்து கிடப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பல முறை புகாா் தெரிவித்தும் பயனில்லை. எனவே, குடியிருப்பு பகுதிகளுக்கு அப்பாற்பட்ட இடத்தில் குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.