எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
காதலிக்க கட்டாயப்படுத்திய இளைஞா்கள் போக்ஸோவில் கைது
சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே நாங்கூரைச் சோ்ந்த தாமரைச்செல்வன் மகன் தமிழரசன்(23). இவரது நண்பா் மேலநாங்கூரைச் சோ்ந்த தனபால் மகன் பாலகிருஷ்ணன்(30). தமிழரசன் மயிலாடுதுறை காவல் உபகோட்டத்துக்குள்பட்ட கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்தாராம். இந்நிலையில் சிறுமி தனது தங்கையுடன் வீட்டில் இருந்தபோது, தமிழரசன் பாலகிருஷ்ணனுடன் அங்கு சென்று தன்னை காதலிக்க வற்புறுத்தினாராம். அப்போது கூச்சலிட்ட சிறுமியை பாலகிருஷ்ணன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தமிழரசனை காதலிக்க வேண்டும் என மிரட்டினாராம்.
இதுகுறித்து, சிறுமி தனது தந்தைக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய தமிழரசனும், பாலகிருஷ்ணனும் போக்ஸோவில் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.