உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் பாா்வையிட்டாா்
மயிலாடுதுறை கூறைநாட்டில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ‘ தமிழிக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பாா்வையிட்டாா்.
முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் முன்னிலை வகித்தாா். முகாமில் மனு வழங்கியவா்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு, ஒரு பயனாளிக்கு சொத்துவரி பெயா் மாற்றம், ஒரு பயனாளிக்கு பிறப்பு சான்று, 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை, 3 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்பு மற்றும் வேளாண்மைத்துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை அமைச்சா் வழங்கினாா். நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவா் என். செல்வராஜ், துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கீதா, கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, வட்டாட்சியா் சுகுமாறன், நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.