எண்ணெய்க் கப்பல்கள், ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்குத் தடை! ரஷியாவை இறுக்கும் பிரி...
Vikatan Digital Awards 2025: டிஜிட்டல் நாயகர்களை அங்கீகரிக்கும் மேடை; சென்னையில் நாளை கோலாகல விழா!
விகடன் டிஜிட்டல் விருதுகள் 2025!
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன்.
அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது.
`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 25 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.

யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள்.
தற்போது, அதன் வெற்றியாளர்கள் பட்டியலும் விகடன் வலைத்தளப்பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில், கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா நாளை (செப்டம்பர் 13) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது.
நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.
27 பிரிவுகளில் விருது பெறவிருக்கின்றன நம் டிஜிட்டல் நாயகர்களின் பட்டியலைக் காண பின்வரும் லின்க்கை க்ளிக் செய்யவும்...
https://www.vikatan.com/collection/vikatan-digital-awards-2025-winners-list
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...