செய்திகள் :

எண்ணெய்க் கப்பல்கள், ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்குத் தடை! ரஷியாவை இறுக்கும் பிரிட்டன்!

post image

ரஷிய எண்ணெய்க் கப்பல்கள் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் நிறுவனங்கள் மீது பிரிட்டன் தடை உத்தரவிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தொடர் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தாலும், அவற்றை ரஷியா கண்டுகொள்வதாகவேயில்லை.

இந்த நிலையில், ரஷியாவின் எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் நிறுவனங்கள் மீது பிரிட்டன் தடை விதித்து அறிவித்துள்ளது.

ரஷியாவில் எண்ணெயை ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் சுமார் 70 கப்பல்களைக் குறிவைத்து, அவற்றின் செயல்பாட்டை முடக்கும்வகையில், அவற்றின் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது. மேற்கத்திய தடையை மீறி, எண்ணெய்யை ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் இந்தக் கப்பல்களின் மீதான தடையானது, ரஷியாவின் எண்ணெய் வருவாயைக் குறைக்கும்.

ஷேடோ ஃப்லீட் என்ற அமைப்பின் ஒரு பகுதியான இந்தக் கப்பல்கள்தான், ரஷியாவின் பொருளாதாரத்தில் முக்கிய வருவாயை ஈட்டித் தருகிறது.

மேலும், ரஷியாவில் ஏவுகணை மற்றும் ட்ரோன்களுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், வேதிபொருள்கள், வெடிபொருள்களை வழங்கி, அந்நாட்டின் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் 30 நிறுவனங்கள் மீதும் பிரிட்டன் தடை விதித்துள்ளது.

இதையும் படிக்க:பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமையாது; அது எங்கள் நிலம்: நெதன்யாகு

UK launches new Russia-related sanctions targeting shadow fleet, weapons suppliers

உயிரின் விலை ஒரு புல்லட்! சார்லி கிர்க்கும் சர்ச்சைப் பேச்சுகளும்!

“துப்பாக்கிகள் உயிரைக் காக்கின்றன”..!_ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க் கொல்லப்பட்ட நிலையில் அவரின் பழைய எக்ஸ் பதிவுகளும் அவரின் சர... மேலும் பார்க்க

முன்னாள் ஓபன்ஏஐ ஊழியர் சுச்சிர் பாலாஜி கொலை செய்யப்பட்டார்: எலான் மஸ்க் குற்றச்சாட்டு

ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சுச்சிர் பாலாஜி மரணம் தற்கொலையல்ல, கொலை என்று தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ... மேலும் பார்க்க

தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

புது தில்லி: தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஃஷா பாத்திமா, மீரான் ஹைதர் ஆகியோரின் ஜாமீன் மனு... மேலும் பார்க்க

பஞ்சாபில் வெள்ளம்: படகு கவிழ்ந்து 10 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மீட்புப் பணியின்போது மூன்று படகுகள் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடு... மேலும் பார்க்க

பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமையாது; அது எங்கள் நிலம்: நெதன்யாகு

பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஸா மீது இஸ்ரேலின் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் தொடர்ந்து கண்டனமும் எதிர்ப்புகளும் ... மேலும் பார்க்க

நேபாள வன்முறையை ஆவணமாக்கிய பிரிட்டன் காணொளிப் பதிவர்..! வரலாறான சுற்றுப் பயணம்!

பிரிட்டனைச் சேர்ந்த Vlogger - வீலாகர் (காணொளிப் பதிவர்) நேபாளத்தில் நடந்த கலவரத்தை விடியோவாக பதிவிட்டு வைரலாகியுள்ளார். சுற்றுலாச் சென்றவருக்கு வரலாற்று நிகழ்வினைப் படம்பிடிக்கும் அனுபவம் கிடைத்ததாக ச... மேலும் பார்க்க