செய்திகள் :

சேலம்: ரவுடியுடன் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்ணுக்கு டார்ச்சர்; முதியவர் அடித்துக் கொலை

post image

சேலம் மாநகர் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (65). விவசாயியான இவர் கடந்த 18.08.2025 அன்று வீட்டில் படுத்திருந்த போதும் மின்விசிறி கழன்று செல்லப்பன் தலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தையல் போடப்பட்டுக் குணமானது. விவசாயி செல்லப்பன் மாட்டுக் கொட்டாயில் கட்டில் போட்டுப் படுப்பது வழக்கம். இதே போல் கடந்த 07.09.2025 இரவு அங்குப் படுத்திருந்தபோது அவர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற போலீசார் செல்லப்பனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். பிரேதப் பரிசோதனையின் போது செல்லப்பன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

MURDER
MURDER

இதையடுத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்திய போது செல்லப்பன் திருமணமான பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகத் தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அப்பெண்ணுடன் திருமணம் மீறிய உறவிலிருந்த பிரபு மற்றும் அவருடைய நண்பர்கள் குமரவேல், தினேஷ் ஆகியோருடன் சேர்ந்து செல்லப்பனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடி பிரபுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் உறவு இருப்பதைத் தெரிந்து கொண்டு தன்னுடனும் தொடர்பில் இருக்குமாறு அப்பெண்ணை செல்லப்பன் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததால் நண்பர்களின் உதவியோடு அவரைத் தீர்த்துக் கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சென்னை: கணவருக்குத் தெரியாமல் கடன்; நகைக்கடையில் திருட வந்த குடும்பத் தலைவி... கைதுசெய்த போலீஸ்!

திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சன்னதி தெருவில் குடியிருந்து வருபவர் தேவராஜ் ஜெயின் (54). இவர் அந்தப்பகுதியில் தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம் தேவராஜ் ஜெயி... மேலும் பார்க்க

சென்னை: பைக் டாக்ஸி ஓட்டும் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கல்லூரி மாணவன் கைதான பின்னணி என்ன?

சென்னை, ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், குடும்பச் சூழல் காரணமாக பைக் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம், கோயம்பேடு முதல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. வரை செ... மேலும் பார்க்க

சென்னை: கோயம்பேட்டில் அரசு பேருந்தை திருடிய வடமாநில இளைஞர் - நெல்லூரில் சிக்கிய பின்னணி!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டிச் செல்ல டிரைவரும் கண்டக்டரும் நேற்று (11.9.2025) வந்தனர். அப்போது அங்கு பேருந்து இல்... மேலும் பார்க்க

பயன்பாடில்லாத இடத்தில் சாலை; மனு அளித்த சமூக ஆர்வலர் கார் ஏற்றிக் கொலை - பேரூராட்சித் தலைவர் கைது!

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). சமூக ஆர்வலரான இவர், அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்கு புதன்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்... மேலும் பார்க்க

கோவில்பட்டி: திரைப்பட வசனம் பேசி இன்ஸ்டாகிராமில் சவால்; இளைஞரை எச்சரித்த போலீஸ்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மூப்பன்பட்டியை சேர்ந்தவர் முகில் ராஜ். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளில் தொடர்புடைய இ... மேலும் பார்க்க

Hyderabad: பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; வேலைக்கு சேர்ந்த வீட்டில் இளைஞர் செய்த கொடூரம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஸ்வான் லேக் அபார்ட்மெண்டின் 13வது மாடியில் வசித்தவர் ரேணு அகர்வால்(50). இவரது கணவர் ராகேஷ். இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். ராகேஷும், அவரது மகனும் காலையில்... மேலும் பார்க்க