செய்திகள் :

Amazon: `10 நிமிடங்களில் டெலிவரி' – போட்டி நிறுவனங்களுக்கு சவால் விட அமேசானின் புதிய முயற்சி!

post image

நேரம் தான் இன்று பணம் என்று சொல்வது பழமொழி அல்ல, நிஜம். காலை தேநீருக்கான பால் இல்லையென்றால்? அல்லது சமைக்கும்போது உப்பு திடீரென முடிந்துவிட்டால்? இப்படிப்பட்ட சிறிய ஆனால் அவசரமான தருணங்களில், சில மணி நேரம் கூட காத்திருப்பது சிரமமாகிவிடுகிறது. இதற்கான தீர்வாகவே, இன்றைய இ-காமர்ஸ் உலகம் "மிக வேகமான விநியோகம்" என்ற புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. ஆடை முதல் உணவுப் பொருள் வரை அனைத்தும் வீட்டு வாசலில் வந்து சேரும்.

ஆனால் இப்போது நிலை மாறியுள்ளது. நுகர்வோர் “அடுத்த நாள்” டெலிவரியைக்கூட காத்திருக்க விரும்பவில்லை. “இப்போதே வேண்டும்” என்பதே எதிர்பார்ப்பு. இதில்தான் Blinkit, Zepto, Swiggy Instamart, BigBasket போன்ற நிறுவனங்கள் 10–15 நிமிடங்களில் பொருள்களைக் கொண்டு வந்து, மக்களின் பழக்கங்களை மாற்றிவிட்டன.

ஜொமோட்டோ

அந்தப் போட்டியில் பின்தங்காமல் இருக்கவே, அமேசான் மும்பையில் 10 நிமிட விநியோக சேவையைத் தொடங்கியுள்ளது. “உடனடி தேவை – உடனடி தீர்வு” என்ற மனப்போக்கைப் பயன்படுத்தியே இது வந்திருக்கிறது.

அமேசானின் தனி உத்தி என்னவென்றால், நகரின் பல இடங்களில் சிறிய மைக்ரோ கையிருப்பு மையங்கள் அமைத்துள்ளது. அருகிலிருந்தே பொருள்கள் அனுப்பப்படுவதால், நேரம் வீணாகாது. இதனால் போட்டியாளர்களின் ஆட்டத்தில் நேரடியாக களம் இறங்கிவிட்டது.

இந்த முயற்சிக்கு ஒரு தனித்தன்மை உண்டு – இது வெறும் வணிக தந்திரம் அல்ல, நம் வாழ்க்கை முறையை மாற்றும் சக்தி கொண்டது. முன்பு நுகர்வோர் “ஆன்லைனில் வாங்கினால் மலிவு” என்று நினைத்தார்கள்; இப்போது “ஆன்லைனில் வாங்கினால் உடனே வரும்” என்பது நம்பிக்கை.

அமேசான் - Amazon

இன்னும் ஒரு முக்கிய அம்சம் – இத்தகைய வேகமான விநியோகத்தால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. விநியோகப் பணியாளர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கின்றன; அதே சமயம், லாஜிஸ்டிக்ஸ் துறையில் புதிய முதலீடுகள் ஏற்படுகின்றன.

அமேசான் தனது ‘அமேசான் நவ்’ 10 நிமிட விநியோக சேவையை மும்பையின் சில பகுதிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு பெங்களூரு மற்றும் டெல்லியில் துவங்கிய இந்த அதிவேக சேவை, இப்போது மும்பையிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய மளிகைப் பொருள்கள், தனிநபர் பராமரிப்பு பொருள்கள் உள்ளிட்டவை 10 நிமிடங்களுக்குள் வீட்டு வாசலில் கிடைக்கும் வசதி உருவாகியுள்ளது.

`StartUp' சாகசம் 39: "Excavators பெரிதாகத்தான் இருக்க வேண்டுமா?" - மாற்று யோசனையில் சாதித்த Tomgo

Tomgo Agro Machines`StartUp' சாகசம் 39சமீபகாலமாக, இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.இத்தகைய திட்டங்களில், மினி அகழ்வாராய்ச்சி இயந்திரங்... மேலும் பார்க்க

GRT: குழந்தைகளுக்கான நம்பிக்கையின் பாதையைப் பிரகாசமாக்கும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

வாஷினி இல்லம் அறக்கட்டளையின் நடமாடும் குழந்தை சிகிச்சை சேவைக்காக ரூ.58 லட்சம் நிதி உதவியை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தாராளமாக வழங்கியுள்ளது.இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லாஸ் வணிகத... மேலும் பார்க்க

Guar: இந்தியா உற்பத்தி செய்யும் கொத்தவரங்காய்க்கு அமெரிக்காவில் டிமாண்ட்; எதற்குத் தெரியுமா?

இந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்படும் கொத்தவரங்காய், உலக சந்தையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் கொத்தவரங்காய்க்கு அதிக டிமெண்ட் இருப்பதாக பிபிசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தவரங... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 38: `முதுகுவலிக்காக ஒரு ஸ்டார்ட்அப் தொடங்கியது ஏன்?’ - அ. முகமது சலீம் சொல்வதென்ன?

Alshifa Spine Ayush`StartUp' சாகசம் 38முதுகு வலி உலகளவில் அதிக அளவில் மக்களை பாதிக்கும் ஒரு உடல்நலப் பிரச்னையாகும். இது எந்த வயதினரையும் பாதிக்கலாம். குறிப்பாக, வேலை செய்யும் வயதினர் மத்தியில் இது மிக... மேலும் பார்க்க

GRT: தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாய் வழங்கிய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி Jewellers தங்கள் வணிக ரீதியான வளர்ச்சியையும் தாண்டி, இந்த சமூகத்திற்கு தாங்கள் அளிக்கும் பங்களிப்பு மற்றும் தாக்கத்தை மதிப்பிட வேண்டும் என்பதை மீண்... மேலும் பார்க்க

9K Gold: பிரபலமாகும் 9K தங்க நகைகள்; 22K தங்கத்திற்கு மாற்றா? விலை, தரத்தில் என்ன வித்தியாசம்?

கடந்த சில மாதங்களாக தங்க விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தங்க கட்டிகளுக்குச் சுங்கவரி விதித்தது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் சிரம... மேலும் பார்க்க