மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!
மணிப்பூர் மாநிலத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்.13) அரசு முறைப் பயணமாகச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இரண்டு வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வன்முறை வெடித்தது. இதையடுத்து, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்துக்குச் செல்வதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி, சூராசந்திரப்பூர் மற்றும் இம்பால் ஆகிய மாவட்டங்களில் இடம் மாற்றப்பட்ட மக்களை சந்திப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சூராசந்திரப்பூர் மாவட்டத்துக்கு ரூ.7,300 கோடி மற்றும் இம்பாலுக்கு ரூ.1,200 கோடி என மொத்தம் ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் அவர் துவங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மணிப்பூர் மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு