Parasakthi: "பராசக்(தீ) பரவட்டும்" - பொங்கலுக்கு விஜய்யுடன் மோதும் SK | Official Announcement
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் இயக்கநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் 25-வது படமாக `பராசக்தி' என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் முக்கிய திருப்புமுனை நிகழ்வான இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் கதைக்களம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, காரைக்குடி, இலங்கை எனப் பரபரப்பாகத் தொடங்கி இடையில் சில காரணங்களால் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது.
பட அறிவிப்பு வெளியானபோதே பொங்கலுக்கு இப்படம் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துடன் திரையரங்குகளில் வெளியாகும் என்று பேச்சுகள் அடிபட்டன.
ஆனால், இடையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் பொங்கலுக்கு படம் வெளியாகுமா என்பது சந்தேகமா இருந்தது.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் பராசக்தி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
எக்ஸ் தளத்தில், சிறிய வீடியோவுடன் `பராசக்(தீ) பரவட்டும்' எனக் குறிப்பிட்டு, 2026 ஜனவரி 16-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டிருக்கிறது.
பராசக்(தீ) பரவட்டும்
— DawnPictures (@DawnPicturesOff) September 12, 2025
A stunning ride through history awaits#Parasakthi in Theatres from 14th January 2026@siva_kartikeyan@Sudha_Kongara@iam_ravimohan@Atharvaamurali@gvprakash@redgiantmovies_@Aakashbaskaran@sreeleela14@dop007@editorsuriya@supremesundar… pic.twitter.com/dCzBDn5AeC
விஜய்யின் கூற்றுப்படி அவரின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி 9-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக முன்பே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பராசக்தி படம் ஜனவரி 14-ல் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், பொங்கலுக்கு விஜய் vs சிவகார்த்திகேயன் என ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்துக்குத் தயாராகத் தொடங்கிவிட்டனர்.