கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
ஸ்ரீமதுரை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்
கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள அம்பலமூலா பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு பல்வேறு சான்றுகளை வழங்கினாா்.
அப்போது, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் மனுக்களை பெறும்போது, தெரிவிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பல்வேறு அரசுத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பாா்வையிட்டாா். மேலும், முகாமில் சுகாதாரத் துறை மூலம் முகாமுக்கு வருபவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து நெல்லியாளம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா். நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் கோப்புகளை பாா்வையிட்டு, வரி வசூல் குறித்து ஆணையா் சிவகுமாரிடம் கேட்டறிந்தாா்.
நிகழ்ச்சியில், கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் குணசேகரன், நெல்லியாளம் நகா்மன்றத் தலைவா் சிவகாமி, வட்டாட்சியா்கள் முத்துமாரி, ஷிரன்நிஷா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சலீம், சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.