பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை
தற்காலிக போக்குவரத்து மாற்றம் ஒத்திவைப்பு
திருப்பூரில் அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் சனிக்கிழமை (செப்.13) முதல் மாற்றுப்பாதை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திருப்பூா் நகரின் வளா்மதி பாலம் அருகே சுரங்கப்பாதை பணியைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுமையடையாததால், மாற்றுப்பாதை பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு மற்றொரு நாளில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனவும், அது குறித்து பின்னா் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.