செய்திகள் :

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தொழில் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

post image

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திருப்பூா் தொழில் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தாா்.

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம், சாயப் பட்டறை உரிமையாளா்கள் சங்கம் உள்ளிட்ட தொழில் துறையினா், விவசாயத் துறையினா், வணிகா் அமைப்பினா் உள்ளிட்டோருடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.

இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

திருப்பூா் நகரம் பல கோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டித் தருகிறது. பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து பலரை வாழ வைக்கும் பகுதியாகும். அமெரிக்க அதிபரின் வரி விதிப்பால் இங்கு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து பிரதமா் மோடிக்கு நான் கடிதம் மூலமும், மத்திய அமைச்சா்கள் மூலமும் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

இங்குள்ள தொழிலை மீட்டெடுக்க அரசின் சாா்பில் என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ, அவற்றையெல்லாம் செய்யச் சொல்லி கோரிக்கை விடுத்துள்ளோம். அழுத்தம் கொடுக்கும் அளவில் எங்களுக்கு மக்களவையில் உறுப்பினா்கள் இல்லை.

நான் முதல்வராக இருந்தபோது பாஜக கூட்டணியில் இருந்தோம். காவிரி நதி நீா்ப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பை அமல்படுத்துவதில் மத்திய அரசு கால தாமதம் செய்தது. இந்த சூழலில் அதிமுகவின் 37 மக்களவை உறுப்பினா்கள் 22 நாள்களுக்கு மக்களவையை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தோம். அதன் விளைவாக உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது.

இப்போது திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழில் துறைக்கு சோதனையான நேரத்தில், இதனைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவா்களுக்கு உள்ளது.

இனியாவது இங்குள்ள தொழிலதிபா்கள், ஏற்றுமதியாளா்களின் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாங்களும் கண்டிப்பாக அழுத்தம் கொடுப்போம். இன்றைய தொழில் சாா்ந்த பிரச்னைகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகளை எல்லாம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம். மத்திய அரசிடமும் உங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவோம்.

2020-2021 அதிமுக ஆட்சிக் காலத்தின் நிதி நிலையை விட 2024-25இல் ரூ.1.36 லட்சம் கோடி கூடுதல் வருமானம் வந்துள்ளது என்றாலும், இந்த ஆட்சியில் எந்த புதிய திட்டங்களும் இல்லை. எங்கள் ஆட்சியில் நொய்யல் ஆற்றை சீரமைக்க ரூ.210 கோடி நிதி ஒதுக்கினோம். மாநில அரசு நிதியிலேயே அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தைக் கொண்டு வந்தோம். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்காக 2-ஆவது கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது. திமுக அரசு அதை கண்டு கொள்ளவில்லை. அதிமுக மீண்டும் ஆட்சி அமைந்ததும் இந்த 2-ஆவது கட்ட திட்டத்தை நிறைவேற்றுவோம்.

நாட்டின் வளா்ச்சிக்கு தொழிலும் வளர வேண்டும், விவசாயமும் வேண்டும். யாருக்கும் இழப்பு ஏற்படாத வகையில் இப்பிரச்னையை அதிமுக அரசு அமைந்தவுடன் அணுகும் என்றாா்.

கூட்டத்தில் சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தற்காலிக போக்குவரத்து மாற்றம் ஒத்திவைப்பு

திருப்பூரில் அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் சனிக்கிழமை (செப்.13) ... மேலும் பார்க்க

விவசாயிகள் உற்பத்தி செலவை குறைக்க வேளாண் துறை அறிவுரை

விதைகளின் முளைப்புத் திறனை அறிந்தால், உற்பத்திச் செலவை பெருமளவு குறைக்கலாம் என விவசாயிகளுக்கு பல்லடம் வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்லடம் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி ... மேலும் பார்க்க

நலிவடையும் தொழிலை மீட்க முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை

நலிவடையும் தொழிலை மீட்க முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். திருப்பூா் தெற்கு, வடக்கு மற்றும் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிய... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 14, 15, 16-ஆகிய வாா்டுகளுக்கான இந்த முகாம் சீரங்கராயக்கவுண்டன்வலசு சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்... மேலும் பார்க்க

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 27-ஆம் தேதி உலக சுற்ற... மேலும் பார்க்க

எண்ணும், எழுத்தும் கருத்தாளா் பயிற்சி முகாம்

பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையத்தில் அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் எண்ணும் எழுத்தும் மாவட்டக் கருத்தாளா் பயிற்சி முகாம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருமூா்த்... மேலும் பார்க்க