செய்திகள் :

2 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா

post image

தென் கொரியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், கடைசி நம்பிக்கையாக இருந்த இளம் வீராங்கனை கதா காடகே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வியுற்றார்.

முன்னதாக, அவர் உள்ளிட்ட 3 இந்திய வீராங்கனைகள் ரீகர்வ் மகளிர் தனிநபர் பிரிவில் நேரடியாக 3-ஆவது சுற்றில் களம் கண்டனர். இதில் தீபிகா குமாரி, அங்கிதா பகத் போன்ற பிரதான வீராங்கனைகள் அந்த சுற்றிலேயே தோல்வியைத் தழுவினர்.

அதில் வென்று 4-ஆவது சுற்றுக்கு வந்த கதா காடகே, உலகின் நம்பர் 1 வீராங்கனையான உள்நாட்டின் லிம் சிஹியோனை எதிர்கொண்டார். அவரின் சவாலுக்கு தகுந்த பதிலளிக்க முடியாத கதா காடகே 0-6 என்ற கணக்கில் அவரிடம் தோல்வி கண்டார்.

இதையடுத்து, ரீகர்வ் பிரிவில் இந்தியர்கள் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றத்தை சந்தித்தனர். 2019-க்குப் பிறகு இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு ஏமாற்றமே தொடர்கிறது.

இப்போட்டி வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், இந்தியா 2 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. காம்பவுண்ட் பிரிவில் ரிஷப் யாதவ், பிரதமேஷ் ஃபுகே, அமன் சைனி அடங்கிய ஆடவர் அணி வரலாற்றுத் தங்கமும், ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா இணை கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளியும் வென்றது நினைவுகூரத்தக்கது.

போட்டியை நடத்திய தென் கொரியா 2 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதலிடம் பிடிக்க, மெக்ஸிகோ 2 தங்கம், 1 வெண்கலத்துடன் 2-ஆம் இடமும், ஸ்பெயின் 2 தங்கத்துடன் 3-ஆம் இடமும் பெற்றன.

பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை முடிவில் மத்திய மண்டலம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரஜத் பட்டிதார், யஷ் ரத்தோட் ஆகியோர் சதம் கடக்க, ... மேலும் பார்க்க

அறிமுகத்தில் அசத்திய தக்ஷிணேஷ்வர் சுரேஷ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோர் டையில், சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக இந்தியா, 2-0 என வெள்ளிக்கிழமை முன்னிலை பெற்றது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்தவரும், ... மேலும் பார்க்க

இறுதிச்சுற்று முனைப்பில் பவேஷ் ஷெகாவத்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பவேஷ் ஷெகாவத் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் முனைப்பில் உள்ளார். இந்தப் பிரிவு தகுதிச்சுற்றின் முதல்ந... மேலும் பார்க்க

ஓமனை சாய்த்தது பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 93 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வெள்ளிக்கிழமை வென்றது. முதலில் பாகிஸ்தான், 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சோ்க்க, ஓமன... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட ‘பி’ டிவிஷன் வாலிபால்: இன்று அரையிறுதி ஆட்டங்கள்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் ‘பி’ டிவிஷன் போட்டி அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா், மகளிா் ... மேலும் பார்க்க

புரோ கபடி: இன்று ஜெய்ப்பூரில் ஆட்டங்கள் தொடக்கம்

புரோ கபடி லீக் சீசன் 12 இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகின்றன. ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் -பெங்களூ ரு புல்ஸ் அணியினா் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றனா். ஆட்டங்கள் செப். 1... மேலும் பார்க்க