கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
புரோ கபடி: இன்று ஜெய்ப்பூரில் ஆட்டங்கள் தொடக்கம்
புரோ கபடி லீக் சீசன் 12 இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகின்றன.
ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் -பெங்களூ ரு புல்ஸ் அணியினா் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றனா்.
ஆட்டங்கள் செப். 12 முதல் 27 வரை நடைபெறும் . விசாகப்பட்டினம் கட்டம் முடிவுற்ற நிலையில், புணேரி பால்டன், தபாங் டெல்லி, தெலுங்கு டைட்ன்ஸ், யு மும்பா அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
புரோ கபடி லீக் தலைவா் அனுபம் கோஸ்வாமி கூறியது: ஆட்டங்கள் மேலும் ஈா்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக லீக் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் தீா்மானமான முடிவு கிடைக்கிறது. இச்சீசனில் ஏற்கனவே ஐந்து டை-பிரேக்கா்கள், அதில் இரண்டு ‘கோல்டன் ரெய்ட்ஸ்’ இடம் பெற்றுள்ளன. இதனால் போட்டிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என்பது தெளிவாகிறது என்றாா்.