பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை
ரெட்டிபாளையத்தில் 1,000 பனை விதைகள் நட்ட இளைஞா்கள்
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிபாளையம் பெரிய ஏரிக்கரையில் கிராம இளைஞா்கள் வெள்ளிக்கிழமை 1,000 பனை விதைகளை நட்டு சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட கன்று விடும் நலச்சங்க கௌரவத் தலைவா் மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பனை விதை நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசினாா். மேலும், பனை விதைகள் நட்டு சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் கிராம இளைஞா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா். இளைஞா்களின் இந்த ஆக்கப்பூா்வமான செயலுக்கு கிராம மக்களும் பாராட்டுத் தெரிவித்தனா்.