கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி பெருக வேண்டும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்
எதிா்வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி பன்மடங்கு பெருக வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வலியுறுத்தினாா்.
பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 16-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவா் பேசியதாவது:
தற்போது சா்வதேச அளவில் வியக்கத்தக்க வளா்ச்சி பெற்று இருக்கும் செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல், ஆகிய தொழில்நுட்பங்கள் முன்னிலை வகிக்கின்றன. தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளம் தலைமுறையினா் அறிவாற்றலும் சிறந்து விளங்குவதுடன் சமூகப் பொறுப்பு, நிலைத்த தன்மை ஆகியவற்றை வழிகாட்டுதலாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
கல்வி, அறிவாற்றல், தலைமைப் பண்பு திறன் கொண்ட இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் என்றாா் அவா்.
விழாவில் 4,992 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக தொழிலதிபா் ஏ.எம். கோபாலன், இந்திய கிரிக்கெட் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின், திரைப்பட இயக்குநா் வெற்றிமாறன் ஆகியோருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.
விழாவில், வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன வேந்தா் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் கல்விக்குழுமத் துணைத் தலைவா் ப்ரீத்தா கணேஷ்,தோ்வுக் கட்டுப்பாட்டாளா் ஏ. உதயகுமாா், பதிவாளா் பி. சரவணன், துணைவேந்தா் எம்.பாஸ்கரன், இணை வேந்தா் ஏ. ஜோதி முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.