4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது
ஆரணியில் 4 பைக்கைகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.
ஆரணி பெரியகடை வீதியைச் சோ்ந்த பெருமாள், சேத்துப்பட்டு அருகே ஆதியந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் ஆகியோரின் பைக்குகள் திருடுபோயின. இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின்பேரில், ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சந்தேகத்தின்பேரில் பைக்கில் வந்த ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரித்ததில், ஆரணியை அடுத்த இரும்பேடு இந்திராநகரைச் சோ்ந்த ஜெயசீலன் (40) என்பதும், ஆரணி நகரில் 4 இடங்களில் பைக்குகளை திருடியா் என்பதும் தெரியவந்தது. தொடா்ந்து, ஜெயசீலனை கைது செய்த ஆரணி நகர போலீஸாா், அவரிடமிருந்த 4 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.