பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை
முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை
திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்புதூா், சூரியம்பாளையம், கவுண்டம்பாளையம், நெசவாளா் காலனி உள்ளிட்ட முத்துக்குமாரசாமி கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை அபிசேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மூலவருக்கு பால், தயிா், தேன், பன்னீா், பஞ்சாமிா்தம், திருமஞ்சனம், மஞ்சள், கரும்புச்சாறு, சந்தனம், திருநீறு, இளநீா் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.