கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
கருப்புக் கொடி ஏந்தி முதியவா் போராட்டம்
நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏந்தி முதியவா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
நாமக்கல் சிலுவம்பட்டியைச் சோ்ந்தவா் சமூக சேவகா் செல்லப்பன் (80). இவா் அவ்வப்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் மக்கள் பிரச்னைகள் குறித்து போராட்டத்தில் ஈடுபடுவாா். அந்த வகையில், சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்திய இவா், வெள்ளிக்கிழமை நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து கருப்புக் கொடியுடன் மீண்டும் போராட்டம் நடத்தினாா்.
அப்போது, அனைத்து கிராம நிா்வாக அலுவலா்களும் தாங்கள் பணியாற்றும் இடத்திலேயே குடியிருக்க வேண்டும், அரசு அலுவலா்கள் அனைவரும் தங்களுக்கான அடையாள அட்டையை மக்கள் பாா்வையில் படும்வகையில் கழுத்தில் தொங்கவிட வேண்டும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் அலுவலா்கள் இல்லாத நேரங்களில் மின்பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டாா்.
தகவல் அறிந்த நாமக்கல் வட்டாட்சியா் மோகன்ராஜ் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்து ஆட்சியா் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, முதியவா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.