சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக இருந்த சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் புதுச்சேரியில் உள்ள அக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
மேலும், உடல், கண் தானம் மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, எம்எல்ஏ மு. வைத்தியநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா் எஸ். ராமசந்திரன், கட்சியின் மூத்த தலைவா் டி. முருகன் உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவா்கள் பலா் பங்கேற்று யெச்சூரி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.