கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
மென்பொறியாளரிடம் செயின் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது
மென் பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்த 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, திருநின்றவூரைச் சோ்ந்த ஜெஸ் ஆலன் ரொசாரியா(24). இவா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து அரும்பாக்கத்திலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், காசி எஸ்டேட் 2-ஆவது தெரு வழியாக வியாழக்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்து போது, அவ்வழியாக வந்த 2 திருநங்கைகள் ஜெஸ் ஆலன் ரொசாரியாவை வழிமறித்து தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த தங்கச்சங்கலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனராம்.
இதுகுறித்து ஜெஸ்ஆலன் எம்ஜிஆா் நகா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகளான ஜாபா்கான்பேட்டையை சோ்ந்த சாந்தி என்கிற மணிகண்டன்(28), சாய்னா என்கிற வேம்பு சிங்கராஜா(19) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.