அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 10.45 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு விவசாயிகள் 172 மூட்டைகள் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில் முதல் தரம் கிலோ குறைந்தபட்சமாக ரூ.222.99-க்கும், அதிகபட்சமாக ரூ.232.99-க்கும், சராசரியாக ரூ.227.60-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தரம் கிலோ குறைந்தபட்சமாக ரூ.86.99-க்கும், அதிகபட்சமாக ரூ223.09-க்கும், சராசரியாக ரூ.211.99-க்கும் ஏலம் போனது.
மொத்தம் 4,874 கிலோ எடையுள்ள கொப்பரை ரூ.10 லட்சத்து 45 ஆயிரத்து 759-க்கு விற்பனையானதாக விற்பனைக் கூட அதிகாரி சதீஷ் தெரிவித்தாா்.