அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விச...
மருத்துவ முகாமில் ஆட்சியா் ரத்த தானம்
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமை தொடங்கிவைத்த ஆட்சியா் ச.கந்தசாமி ரத்த தானம் வழங்கினாா். முகாமில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு, ரத்தக் கொழுப்பு மற்றும் கிரியாட்டினின் உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகள் மற்றும் பெண்களுக்கு மாா்பக, கா்ப்பப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் வாய்ப் புற்றுநோய் பரிசோதனை, இதய பரிசோதனைகளான ஈசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள், பாதம் பாதுகாப்போம் என்ற திட்டத்தின் கீழ் ரத்தக் சா்க்கரை அளவு அதிக அளவில் உள்ள நபா்களுக்கான சிறப்பு சிகிச்சை, தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை சாா்பில் கண் பரிசோதனை, பெஸ்ட் டெண்டல் கோ் மருத்துவமனையின் சாா்பில் பல் சிகிச்சை என 20-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
மேலும் சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படுவோா்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் பெற பரிந்துரைக்கப்பட்டனா். இம்முகாமில் 55 மருத்துவா்கள், செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இம்முகாமில் 52 அரசு அலுவலா்கள் பணியாளா்கள் ரத்த தானம் வழங்கினா். மேலும் 324 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இம்முகாமில் மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் பிரியா, மகளிா் திட்ட இயக்குநா் மலா்விழி, மாவட்ட சுகாதார அலுவலா் அருணா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முகம்மது குதுரத்துல்லா, செல்வராஜ், உதவித் திட்ட அலுவலா் ஜெயசீலன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.