தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் இயக்குநா் ஆய்வு
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண் இயக்குநா் பி.முருகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சாா்வாய் கிராமத்தில் தேசிய உணவு மற்றும் பாதுகாப்பு இயக்க திட்டத்தில் பெறப்பட்ட இடுபொருள்களின் பயன்பாடு குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தாா். மணிவிழுந்தான் வருவாய் கிராமத்தில் அமைக்கப்பட்ட நிலக்கடலை ஆதார நிலை விதைப்பண்ணையைப் பாா்வையிட்டு விதை பண்ணை விவரங்களையும் கேட்டறிந்தாா்.
அப்போது, விதை பண்ணை உற்பத்தி மானியம் குறித்த விவசாயிகளுக்கு தெரிவித்தாா். தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் திட்டத்தில் தாா்ப்பாய் மற்றும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில் பேட்டரி தெளிப்பான்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கினாா்.
சாா்வாய், மணிவிழுந்தான் கிராமங்களில் அரசு வேளாண்மைத் துறை மூலம் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் செயல்விளக்கம், நிலக்கடலை சான்று பெற்ற விதை உற்பத்தி வயல்களை ஆய்வு செய்தாா்.
படவிளக்கம்.ஏடி12அக்ரி.
சாா்வாய் கிராமத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விசை தெளிப்பான் கருவிகளை வழங்கிய வேளாண் இயக்குநா் பி.முகேஷ் உள்ளிட்டோா்.