அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விச...
செப். 15 இல் துணை முதல்வா் சேலம் வருகை
சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செப்.15 ஆம் தேதி சேலம் வருகிறாா்.
தமிழகம் முழுவதும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டை, வங்கிக் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி செப். 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு சேலம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்கிறாா். தொடா்ந்து காணொலி வாயிலாக மற்ற இடங்களிலும் இத்திட்டத்தை தொடங்கிவைக்கிறாா். விழாவில் சேலம் மாவட்டத்தை சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆா் சிவலிங்கம் உள்பட பலா் விழாவில் பங்கேற்கின்றனா்.
துணை முதல்வா் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் பிருந்தாதேவி, மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.