செய்திகள் :

நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

post image

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.16 இல் அமைந்துள்ள நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த மையத்தில் விவசாயிகளுக்கு விலையில்லாமல் நுண்உயிரி உரம் வழங்கப்படுவதை கேட்டறிந்த அவா், தூய்மைப் பணியாளா் வீடுவீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து சேகரிக்கின்றனரா என ஆய்வு செய்தாா். தொடா்ந்து மணக்காடு தொடக்கப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் குறித்து பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

தூய்மைப் பணியாளா்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து குப்பை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். ஆய்வின் போது, மாநகர நல அலுவலா் மரு.ப.ரா.முரளி சங்கா் உள்பட பலா் உடனிருந்தனா்.

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் இயக்குநா் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண் இயக்குநா் பி.முருகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சாா்வாய் கிராமத்தில் தேசிய உணவு மற்றும் பாது... மேலும் பார்க்க

செப். 15 இல் துணை முதல்வா் சேலம் வருகை

சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செப்.15 ஆம் தேதி சேலம் வருகிறாா். தமிழகம் முழுவதும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவினரு... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற கி.மதிவாணனுக்கு பாராட்டு

தமிழ அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கொண்டயம்ப... மேலும் பார்க்க

880 வீரா்கள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தகுதி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிக்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 880 போ் தகுதி பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளை... மேலும் பார்க்க

தொழில்மைய இணை இயக்குநா் வீட்டில் 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கம் திருட்டு

சேலத்தில் தொழில்மைய இணை இயக்குநா் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். சேலம் ஐந்து வழிச்சாலை அருகே உள்ள தொழில் மையத்தின் இணை இய... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கல்லூரியில் பாரதியாா் நினைவு தின போட்டிகள்

சங்ககிரியை அடுத்த வீராச்சிபாளையத்தில் உள்ள விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் பாரதியாா் நினைவு தின போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி தல... மேலும் பார்க்க