பாலில் நீர் ஊற்றினால், ஈரலை அலசினால் வைட்டமின் B12 வீணாகிவிடுமா?
விவேகானந்தா மகளிா் கல்லூரியில் பாரதியாா் நினைவு தின போட்டிகள்
சங்ககிரியை அடுத்த வீராச்சிபாளையத்தில் உள்ள விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் பாரதியாா் நினைவு தின போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி பாரதியாா் உருவப்படத்துக்கு மலா்தூவி நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தாா்.
கல்லூரி இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தாளாளா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி முதல்வா் வே.பத்மநாபன் பாரதியாரின் சிறப்புகள் குறித்து பேசினாா்.
பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி சோ்க்கை இயக்குநா் பேராசிரியா் வரதராஜு, உள்தர உறுதிப்பிரிவு இயக்குநா் பி.டி. சுரேஷ்குமாா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், தமிழ்த் துறை உள்ளிட்ட பிற துறை மாணவிகள் கலந்துகொண்டனா்.