செய்திகள் :

பாலில் நீர் ஊற்றினால், ஈரலை அலசினால் வைட்டமின் B12 வீணாகிவிடுமா?

post image

செல்போனை எந்த நேரத்தில் ஓப்பன் செய்தாலும், வைட்டமின் பி 12 குறைபாடு, அதன் அறிகுறிகள், தீர்வுகள் என ரீல்ஸாக கொட்டுகிறது.

பி 12 வைட்டமின் நீரில் கரையக்கூடிய வைட்டமின். அப்படியென்றால், பி 12 நிறைந்த பாலில் தண்ணீர் கலந்தாலோ, ஆட்டு ஈரலை நீரில் அலசினாலோ அவற்றில் இருக்கிற வைட்டமின் கரைந்து போய்விடாதா? சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நோய் நிபுணர் பாசுமணி அவர்களிடம் கேட்டோம்.

Vitamin B 12
B Vitamins

’’வைட்டமின் ஏ.டி.ஈ. மற்றும் கே ஆகிய நான்கும் கொழுப்பில் கரையக்கூடியவை. நம் உடலின் செல்களில், செல்களின் சுவர்களில் கொழுப்பு இருக்கிறது.

இதனால், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை நம்முடைய உடம்பு அதிகமாகச் சேர்த்து வைக்கக்கூட வாய்ப்பிருக்கிறது.

இதன் விளைவாக, உடலில் நச்சுத்தன்மை அதிகமாகி மூளையில் அழுத்தம் அதிகமாகி, கண் பார்வை பாதிக்கப்படலாம்; தோல் வறண்டு போகலாம்.

உடலுக்கு அதிமுக்கியமான வைட்டமின்கள்கூட அளவுக்கு மீறினால் பிரச்னை தருவதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

அதனால்தான், இந்த வகை வைட்டமின் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையைப் பெற்று சாப்பிட வேண்டும் என்கிறோம்.

ஆனால், பி 12 போல நீரில் கரையும் வைட்டமின்கள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகத் தங்கி விஷத்தன்மையை ஏற்படுத்தாது.

Mutton Liver Recipe
Mutton Liver Recipe

பாலில் அதிகமாகத் தண்ணீர் சேர்ப்பதாலோ அல்லது ஈரலை நீரில் சுத்தம் செய்வதாலோ பி 12 வீணாகாது. ஏனென்றால், இந்த வைட்டமின் பால் மற்றும் ஈரலின் ஒவ்வொரு செல்களிலும் பொதிந்திருக்கிறது.

அதனால், பி 12 எப்படியும் நம் உடலுக்குள் சென்றுவிடும். நம்முடைய உடல்தான், அது அதிகமாகும்போது உடலில் இருக்கிற நீரில் கரைத்து வெளியேற்றிவிடும்.

நீங்கள் பி 12 ஊசி போட்டுக்கொள்கிறீர்கள் என்றால், அதன் வீரியம் உங்கள் உடலில் எத்தனை காலம் இருக்கிறது என்பதைப் பொறுத்து மாதத்துக்கு ஓர் ஊசியோ அல்லது மூன்று மாதத்துக்கு ஓர் ஊசியோ போட்டுக்கொள்ளலாம். பி 12-ஐ மாத்திரையாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால், அது மல்ட்டி வைட்டமின் மாத்திரையிலோ அல்லது பி காம்ப்ளெக்ஸ் மாத்திரையிலோ கலந்துதான் வரும். அதனால், பி 12 மாத்திரையை நீண்ட காலம் சாப்பிடுபவர்கள், வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு போட்டுக்கொண்டாலே போதும். ஊசியாகப் போட்டுக்கொள்ளும்போது, பி 12 நிச்சயம் உடலில் சேர்ந்துவிடும். மாத்திரையாகப் போடும்போதும் உடலில் சேர்ந்துவிடும் என்றாலும், பி 12 குறைபாட்டின் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், ஒருமுறை இதற்கான இரத்தப் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

பி12 வைட்டமினை ஊசியாக எடுத்துக்கொண்டாலும் சரி, மாத்திரையாக எடுத்துக்கொண்டாலும் சரி, ஓவர் டோஸ் ஆவதற்கு வாய்ப்பில்லை. உடல் அது தேவைக்கு உறிஞ்சியதுபோக, மீதத்தைச் சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும்’’ என்கிறார் டாக்டர் பாசுமணி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Doctor Vikatan: 15 வயது மகளுக்கு தைராய்டு, கவனச் சிதறலை ஏற்படுத்தும் உடல்பருமன்; எடை குறையுமா?

Doctor Vikatan: என் மகளுக்கு15 வயதாகிறது. சமீபத்தில் அவளுக்குதைராய்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து வருகிறது. அதை நினைத்து அவளால் படிப்பிலும் கவனம் செலுத்த முட... மேலும் பார்க்க

Lotus: தாமரைத்தண்டு இத்தனை ஆரோக்கியம் நிறைந்ததா? டயட்டீஷியன் விளக்கம்!

தாமரை விதையைப் போலவே அதன் தண்டையும் சமைத்து உண்ணலாம். அதன் ஆரோக்கியப் பலன்கள் குறித்து சொல்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.‘’கொடி வகையைச் சேர்ந்த தாமரைத்தண்டில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், பொட்டா... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 8 வயதாகிறது. அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் என பாதிக்கப்படுகிறாள். அவளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லையோ என்று தோன்றுகிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்த... மேலும் பார்க்க

அடிக்கடி நெட்டி முறித்தால் கை விரல்கள் பலவீனமாகுமா?

வேலை செய்துகொண்டிருக்கும்போதே, விரல்களில் 'நெட்டி முறிக்கும்’ வழக்கம் பலருக்கும் இருக்கும். சிலர் இதை ‘சொடக்கு எடுத்தல்' என்றும் சொல்வார்கள். நெட்டி முறிக்கும்போது, எழும் சத்தம் தான் சோர்வை நீக்கி, பு... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் வெயிட்லாஸ் ஆகுமா?

Doctor Vikatan: என்னுடைய தோழி, கடந்த 3 மாதங்களில் 2 கிலோ எடை குறைத்திருக்கிறாள். தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் வெந்நீர் குடிப்பதுதான்வெயிட்லாஸ் ரகசியம் என்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை, வெ... மேலும் பார்க்க

பாட்னாவில் அபூர்வ சம்பவம்; நோயாளியின் கண்ணில் வளர்ந்த பல் - மருத்துவர்கள் கூறுவதென்ன?

பாட்னா இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் (IGIMS) மருத்துவர்கள் சமீபத்தில் ஒரு அபூர்வமான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். பிகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான நபரின் வலது கண்ணுக்குள்... மேலும் பார்க்க