நேபாள சாலைகளில் ஜென் ஸி இளைஞர்கள்! இந்த முறை போராட அல்ல.. சுத்தப்படுத்த!
இந்தியப் பெண்ணை மணந்த கொரிய இளைஞர்; ரூ.1.26 லட்சம் கர்ப்ப கால உதவித்தொகை வழங்கிய கொரிய அரசு
இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை மணந்த கொரிய இளைஞர் திருமணம் செய்தார். அந்தத் தம்பதிக்கு, கர்ப்ப காலத்திற்கான நிதி உதவியாக ரூ.1.26 லட்சம் வழங்கியுள்ளது கொரியா அரசு. வெளிநாட்டுப் பெண்ணை மணந்தாலும், அந்நாட்டுக் குடிமகனாகியதால் சமூக நலத் திட்டத்தில் அவர்களுக்கும் இத்தகைய நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு குழந்தை பெற்றெடுத்ததற்காக அந்த நாட்டு அரசாங்கத்திடமிருந்து 1.26 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது.
கொரியாவில் கர்ப்பமாக இருப்பதற்கு தனக்கு உதவித்தொகை கிடைப்பதாக அவர் சமூக ஊடகத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்ட வீடியோவின்படி, கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் பரிசோதனை, மருத்துவச் செலவு உட்பட இந்திய ரூபாய்க்கு 63,100 ரூபாய் வரை வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் கர்ப்ப காலத்தில் பொதுப் போக்குவரத்து செலவுக்காக அந்தப் பெண்ணுக்கு 46,000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் கொரிய அரசாங்கம் அந்தத் தம்பதியினருக்கு ஒரு குழந்தை பெற்ற பிறகு மொத்தம் 1.26 லட்சம் வழங்கியிருக்கிறது.
டெலிவரிக்கான வாழ்த்துத் தொகை என்று அழைக்கப்படும் அந்த அதிகாரப்பூர்வ நிதி அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
இதுபோக குழந்தையின் முதல் வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் பணம் அளிக்கப்பட்டு வந்ததாக அந்தப் பெண் கூறுகிறார்.
35 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி மற்றும் மருத்துவ உதவி வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.
அதன்படி அவருக்கு இந்த நிதியும் வழங்கப்பட்டிருக்கிறது. பலரும் தென்கொரியாவின் மகப்பேறு திட்டத்தைப் பாராட்டி வருகின்றனர்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!