விஜய் கவுன்சிலர்கூட ஆகவில்லை! எப்படி விமர்சிக்க முடியும்? - நயினார் நாகேந்திரன்
TVK: விஜயின் முதல் பிரசாரம்; திருச்சியைத் தேர்ந்தெடுக்க பின்னணி என்ன? அரசியல் திருப்பம் தருமா?
கடந்த 2008 - ம் ஆண்டு முதல் அரசியலுக்கான காய் நகர்த்தலை செய்து வந்த விஜய், தற்போது த.வெ.க கட்சியைத் தொடங்கி வரும் 2026 - ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது வலதுகாலை எடுத்து வைக்க இருக்கிறார். இதற்கு முன்பு, விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு, மதுரையில் 2008-ம் ஆண்டு முதலே அரசியலுக்கான காய்களை நகர்த்தி வந்த நடிகர் விஜய், தற்போது த.வெ.க கட்சியை உருவாக்கி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களம் இறங்க இருக்கிறார்.
இதற்கு முன்னர், விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு, மதுரையில் இரண்டாம் மாநில மாநாடு நடத்தினார். இப்போது, தனது முதல் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியிலிருந்து தொடங்கவிருக்கிறார்.

விஜய் தனது முதல் பிரசார நிகழ்வுக்குத் திருச்சியைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி குறித்து அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறுகிறார்கள்:
1920-ல் திருச்சியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
1956-ல் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் திருச்சியில் தி.மு.க மாநாடு நடந்தது. அப்போது அண்ணா தலைமையில் “தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா” என்ற முக்கிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன்பின்னரே தி.மு.க தேர்தல் அரசியலில் நுழைந்து இன்று ஆட்சிக்கட்டிலில் உள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கே மாற்ற நினைத்தார். அதற்காக திருச்சியில் ஒரு பங்களாவையும் வாங்கினார். இன்றும் அந்த பங்களா அ.தி.மு.க கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வெற்றிபெற்றார். “ஸ்ரீரங்கம்தான் எனக்குப் பூர்வீகம்” என்று அவர் பெருமையுடன் கூறியிருந்தார்.
இந்த வரிசையில், ‘திருச்சி சென்டிமென்ட்’-ஐ விஜயும் தனது அரசியல் பயணத்தில் பயன்படுத்த விரும்புகிறார். அதனால் தான், திருச்சியில் இருந்து தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்துள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு, திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் அவர் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

இந்நிலையில், “வந்தாரை தேர்தலில் ஜெயிக்க வைக்கும் ஊர் திருச்சி” என்பதால், விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை த.வெ.க தொண்டர்கள் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
முன்னாள் தலைவர்களுக்கு திருப்பம் தந்த திருச்சி, இந்த முறை விஜய்க்கும் அரசியல் திருப்பம் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs