ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
மகளிருக்கான 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் ஈஷா தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்திருக்கிறார்.
தெலங்கானாவைச் சேர்ந்த ஈஷா சிங் (20 வயது) சீனாவில் நிங்போ விளையாட்டு திடலில் நடைபெற்ற மகளிருக்கான 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் சீனாவின் நட்சத்திர வீராங்கனை யாங் சியான்சூனைவிட 0.1 புள்ளி அதிகமாகப் பெற்று தங்கம் வென்றார்.
உலகக் கோப்பையில் இது ஈஷாவின் முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் பதக்கம் பெற்ற தென் கொரியாவின் ஒ யெஜின் வெண்கலம் வென்றார்.
ஈஷாவின் தங்கப் பதக்கத்தால் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.
சீனா 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.