செய்திகள் :

தமிழ் தலைவாஸ் அபார வெற்றி: புள்ளிப் பட்டியலில் 4 இடங்கள் முன்னேற்றம்!

post image

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி 46 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 4 இடங்கள் முன்னேறியுள்ளது.

புரோ கபடி லீக் போட்டிகள் 2014 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறைக்கூட கோப்பை வென்றதில்லை என்பதால் இந்தமுறை மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது.

முதல் போட்டியில் வென்ற தமிழ் தலைவாஸ் அடுத்த 2 போட்டிகளில் தோற்றது. கருத்து வேறுபாடு காரணமாக புதிய கேப்டன் பவன் செராவத் அணியிலிருந்து விலகி அதிர்ச்சி அளித்தார்.

இந்நிலையில், பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதிய தமிழ் தலைவாஸ் 46-36 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.

ரெய்டு மூலம் 25 புள்ளிகள், டேக்கிள் மூலம் 15 புள்ளிகள், ஆல் அவுட் மூலம் 4 புள்ளிகள், எக்ஸ்ட்ரா 2 புள்ளிகள் என மொத்தம் 46 புள்ளிகள் பெற்று அசத்தியது.

இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 4 இடங்கள் முன்னேறி 6ஆவது இடம் பிடித்துள்ளது.

Tamil Thalaivas team won in the Pro Kabaddi League by scoring 46 points.

கருப்பு வெளியீட்டில் மாற்றம்?

நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் கருப்பு. ஆன்மீக பின்னணியில் ஆக்சன் அத... மேலும் பார்க்க

ஹாங் காங் ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சாத்விக் - சிராக்! இந்த சீசனில் முதல்முறை!

ஹாங் காங் ஓபன் அரையிறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்கள் சாத்விக் - சிராக் இணையினர் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்தாண்டில் முதல்முறையாக இவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள... மேலும் பார்க்க

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிருக்கான 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் ஈஷா தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்திருக்கிறார்.தெலங்கானாவைச் சே... மேலும் பார்க்க

ஷ்யாம் புஷ்கரன் எழுத்தில் கமல் 237..! மகிழ்ச்சியில் அன்பறிவ் சகோதரர்கள்!

நடிகர் கமலின் 237-ஆவது படம் குறித்த புதிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாள இயக்குநர் ஷ்யாம் புஷ்கரன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். யார் இந்த அன்பறிவ் சகோதரர்கள்?மெட்ராஸ் படத்த... மேலும் பார்க்க

ஜீத்து ஜோசப்பின் மிராஜ் டிரைலர்!

பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள மிராஜ் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஆசிப் அலியுடன் நடிகை அபர்ணா பாலமுரளி முக்கிய கதாபாத்திரங்களில் ... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் இருந்து விலகினார் ஐஸ்வர்யா லட்சுமி!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.நடிப்பில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும், ரசிகர்கள் ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.தமிழில் ஆக்‌ஷ... மேலும் பார்க்க