அமெரிக்க ஹையர் சட்ட மசோதா: இந்திய ஐடி துறையை கலங்கச் செய்வது ஏன்?
ஜீத்து ஜோசப்பின் மிராஜ் டிரைலர்!
பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள மிராஜ் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் ஆசிப் அலியுடன் நடிகை அபர்ணா பாலமுரளி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆசிப் அலி நடித்துவந்த மிராஜ் படத்தின் படப்பிடிப்பு 48 நாள்களில் நிறைவடைந்ததாக இயக்குநர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மிராஜ் படத்தின் தலைப்புக்கு கீழே ‘அருகில் வரும்போது மறைந்துவிடும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓணம் வாழ்த்துகளுடன் இந்தப் படம் வரும் செப்.19ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.