மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங...
சமூக ஊடகங்களில் இருந்து விலகினார் ஐஸ்வர்யா லட்சுமி!
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடிப்பில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும், ரசிகர்கள் ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழில் ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது கட்டா குஸ்தி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”என்னை துறையில் தக்கவைத்துக் கொள்ள சமூக ஊடகங்கள் மிகவும் அவசியம் என்ற கருத்தில் நீண்ட காலமாக இருந்தேன். நான் இருக்கும் துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன்.
ஆனால், சமூக ஊடகங்கள் என்னை தலைகீழாக மாற்றியுள்ளது. எனது பணிகளில் இருந்து என்னை வெற்றிகரமாக திசைதிருப்பியுள்ளது. என்னுள் இருந்த சிந்தனையைப் பறித்துவிட்டது. என் சொல்லகராதி மற்றும் மொழியைப் பாதித்துள்ளது. ஒரு எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியுள்ளது.
நான் ஒரு பொதுவானவளாக சூப்பர்நெட்டின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப வாழ விரும்பவில்லை. ஒரு பெண்ணாக, அலங்காரம் மற்றும் கட்டுப்பாடு பற்றி அறிந்து கொள்ள நிறைய பயிற்சி செய்ய வேண்டியிருந்தது, மேலும் அதை எதிர்க்க இன்னும் கடினமாக பயிற்சி செய்தேன்.
நான் கலைக்காகவும் எனக்குள் இருக்கும் சிறிய பெண்ணுக்காகவும் சரியானதைச் செய்ய விரும்புகிறேன். முழுமையான இணைய மறதியைத் தேர்ந்தெடுக்கிறேன்.
அர்த்தமுள்ள உறவுகளையும், சினிமாவையும் உருவாக்குவேன் என நம்புகிறேன். நல்ல சினிமாவில் நடித்த பழைய அன்பைக் கொடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை நடிகை அனுஷ்கா, சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.