உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு
மோடியின் மணிப்பூர் பயணம் "கேலிக்கூத்தானது": ஜெய்ராம் ரமேஷ் தாக்கு
புது தில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் பயணம் என்பது "கேலிக்கூத்தானது" என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை விமர்சினம் செய்துள்ளார். இது "அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான சக்தி" என்பதற்குப் பதிலாக "கேலிக்கூத்து" என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி மாநிலத்தில் மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவே செலவிடுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மிஸோரம், மணிப்பூா், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகாா் ஆகிய 5 மாநிலங்களுக்கு சனிக்கிழமை (செப்.13 முதல் 15 வரை) மூன்று நாள்கள் பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.
இந்த மாநிலங்களில் மொத்தம் ரூ.71,850 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவிருக்கிறாா்.
இந்த நிலையில், மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரை வரவேற்கும் விதமாக நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பிரதமர் நரேந்திர மோடி மிசோரம் பயணத்தை முடித்துக் கொண்டு மணிப்பூர் சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் பயணத்தை கேலிக்கூத்தானது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை விமரிசனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் வருகை என்பது கேலிக்கூத்தானது என சனிக்கிழமை விமர்சினம் செய்துள்ளார். இது "அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான சக்தி" என்பதற்குப் பதிலாக"கேலிக்கூத்தானது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த 7 ஆம் தேதி செப்டம்பர் 13 இல் மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை அவரது ஆதரவாளர்கள் வரவேற்று வருகின்றனர்.
ஆனால், அவர் மாநிலத்தில் சுமார் 3 மணி நேரம் மட்டுமே செலவிடுகிறார் என்று தெரிகிறது. இவ்வளவு அவசரமான பயணத்தால் பிரதமர் மோடி என்ன சாதிக்க விரும்புகிறார்?. இது உண்மையில் 29 மாதங்களாக வேதனைகளுடன் அவருக்காகக் காத்திருக்கும் மாநில மக்களுக்கு ஒரு அவமானமாகும்.
மணிப்பூர் மக்கள் மீதான தனது அலட்சியத்தையும் உணர்வின்மையையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ள பிரதமர், செப்டம்பர் 13 மணிப்பூர் பயணம் உண்மையாக இருக்காது என தெரிவித்திருந்தார்