மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங...
விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளையொட்டி, ஹசன் மாவட்டம் மொசலே ஹொசஹள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. அப்போது ஒரு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் வேனின் சக்கரத்துக்கு அடியில் சிக்கி 4 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 24 போ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 4 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் எட்டு பேர் 17-25 வயதுக்குட்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட ஒருவர், 6 பேர் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் பொறியியல் மாணவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து முதல்வா் சித்தராமையா, ‘விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் மிக மன வேதனையை அளிக்கிறது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவா்களுக்கான சிகிச்சை கட்டணத்தை மாநில அரசே ஏற்கும்’என்றாா். மேலும், இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுடன் நாம் அனைவரும் துணை நிற்போம் என கூறியுள்ளார்.