CPI: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு!
மோடி வருகை: மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
மணிப்பூரில் பிரதமர் மோடியின் வருகைக்கு இடையே, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மணிப்பூரில் இன மோதல் தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று(சனிக்கிழமை) மணிப்பூர் சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர்.
மணிப்பூரின் சுராசந்த்பூரில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, மணிப்பூரில் அமைதி நிலைநாட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடி வருகிறார்.
பிரதமர் மோடியின் மணிப்பூர் வருகைக்கு நடுவே தலைநகர் இம்பாலில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி 2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூர் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் காங்கிரஸ் அலுவலகத்திற்கு முன்பாக கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
'பாஜக ஆட்சியின் கீழ் மணிப்பூர் எரிந்தது', 'வகுப்புவாத அரசியலை நிறுத்த வேண்டும்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
பேரணியாகச் செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.
மணிப்பூர் மாநிலம் 2 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி இதுவரை வராதது ஏன்? என எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்வி எழுப்பி வருகின்றன.
Congress's massive protest as PM Modi visits state
இதையும் படிக்க | மணிப்பூர் அமைதிக்காக பாடுபடுவேன்! மோடி வாக்குறுதி!